23 இந்திய மீனவர்களை வங்கதேச அரசு விடுதலை செய்துள்ள நிலையில், 128 வங்கதேச மீனவர்களை இந்திய அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.
சர்வதேச கடல் எல்லைக் கோட்டைக் கடந்து வங்கதேச கடல்பகுதியில் மீன்பிடிக்க முயன்ற 23 இந்திய மீனவர்கள் வங்கதேச அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, மத்திய வெளியுறவு அமைச்சகம், கடலோரக் காவல் படையினர் மற்றும் வங்கதேச அரசின் அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இருநாடுகளும் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்வதற்கு ஒப்புக்கொண்டன.
இந்த நிலையில், 23 இந்திய மீனவர்களை இன்று (ஜன. 29) விடுதலை செய்த வங்கதேச அரசு, சிறைப்பிடித்த 2 மீனவப் படகுகளையும் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், இந்தியக் கடல்பகுதியில் மீன்பிடித்த 128 வங்கதேச மீனவர்கள் மற்றும் அவர்களுடன் சிறைப்பிடிக்கப்பட்ட 5 மீனவப் படகுகளையும் இந்திய அதிகாரிகள் விடுவித்துள்ளனர்.
இந்தக் கைதிகள் பரிமாற்றம், வங்கக் கடலில் சர்வதேச எல்லைக் கோட்டின் அருகில் இன்று காலை நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.