கிட்னிகள் ஜாக்கிரதை! பேரவைக்கு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள்!
பேரவைக்கு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள்...
நாமக்கல் கிட்னி முறைகேடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ‘கிட்னிகள் ஜாக்கிரதை’ என்ற வாசகத்துடன் கூடிய பேட்ஜ் அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் இன்று பேரவைக்கு வருகை தந்தனர்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை கூடிய நிலையில், நேற்று கரூர் கூட்டநெரிசல் விவகாரம் குறித்து முதல்வரின் விளக்கத்தை தொடர்ந்து விவாதிக்கப்பட்டது.
இந்த விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அரசு உரிய பாதுகாப்பு வழங்கியிருந்தால் கூட்டநெரிசல் ஏற்பட்டிருக்காது எனத் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
முதல்வர் மு.க.ஸ்டாலினும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் காரசார விவாதம் மேற்கொண்ட நிலையில், அமைச்சர் சிவசங்கரின் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில், நாமக்கல் கிட்னி முறைகேடு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிட்னிகள் ஜாக்கிரதை’ என்ற வாசகத்துடன் கூடிய பேட்ஜ் அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் இன்று பேரவைக் கூட்டத்துக்கு வருகை தந்துள்ளனர்.
இதனிடையே, பாமக பேரவைக் குழுத் தலைவராக உள்ள ஜி.கே. மணியை நீக்கக் கோரி அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து பேரவை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
Kidneys beware! AIADMK MLAs wearing badges to the assembly
இதையும் படிக்க : ரஷிய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி என்னிடம் உறுதி! டிரம்ப்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.