முதல்வர் மு.க. ஸ்டாலின் IANS
தமிழ்நாடு

ஆணவக் கொலைகளைத் தடுக்க தனி சட்டம்: மு.க. ஸ்டாலின்

எதன் பொருட்டு நடந்தாலும் கொலைதான் என்றும் ஆணவப் படுகொலைக்குப் பின்னால் ஆணாதிக்கம் இருப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: தமிழகத்தில் நடக்கும் ஆணவக் கொலைகளைத் தடுக்கும் வகையில் சட்டம் இயற்ற பரிந்துரைகளை அளிக்க தனி ஆணையம் அமைக்கப்படும் என்று பேரவையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

என்ன காரணமாக இருந்தாலும் கொலை கொலைதான், யாரும் தப்பக் கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆணவக் கொலை குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, ஆதிக்க எதிர்ப்பு, சமத்துவ சிந்தனை கொண்ட சுயமரியாதை அன்பை உருவாக்க முன்னெடுப்போம் என்றார்.

சாதி ஆணவக் கொலைகளை தடுக்க ஆணைய பரிந்துரைப்படி தனிச் சட்டம் இயற்றப்படும். ஆணவப் படுகொலையைத் தடுக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

ஓய்வுபெற்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையில் சட்டவல்லுநர்கள் கொண்ட ஆணையம் அமைக்கப்படும். காலனி என்ற சொல் நீக்கம் குறித்து அறிவித்தேன், இது சாதாரண சாதனை அல்ல. பள்ளி, கல்லூரி விடுதிகளில் சாதி பெயரே கூடாது என சமூக நீதி விடுதிகளாக பெயர் மாற்றியுள்ளோம்.

உலகம் அறிவு மயமாகிறது, அது அன்பு மயமாவதைத் தடுக்கிறது என்பதே நம்மை வாட்டுகிறது. எதன் காரணமாகவும் ஒருவரை மற்றவர் கொள்வதை நாகரீக சமுதாயம் ஏற்காது.

ஆணவப் படுகொலைகளுக்கு சாதி மட்டுமே காரணமல்ல, பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. என்ன காரணமாக இருந்தாலும் கொலை கொலைதான், கொலை செய்வோர் யாரும் தப்பக் கூடாது. படுகொலைக்கு எதிரான விழிப்பணர்வு பரப்புரையை மேற்கொள்ள சமூக ஆர்வலர் அமைப்புகள் முன்னெடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய பொருளாதாரம் மந்தநிலையில் இல்லை: நிா்மலா சீதாராமன்

பனிமூட்டம்: சென்னையில் விமான சேவைகள் தாமதம்

தோ்தலில் வைப்புத் தொகையை பெறுவதற்கான வாக்குகளை பெற பாஜக தலைவா்கள் தமிழகம் வந்துதான் ஆக வேண்டும்: அமைச்சா் ரகுபதி

தொழிலாளி கழுத்தறுத்து கொலை

கா்நாடகம், தமிழகம், தெலங்கானா நகரங்களில் டிசம்பா் 16-22 வரை குடியரசுத் தலைவா் பயணம்

SCROLL FOR NEXT