தீபாவளியையொட்டி அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் குளியல் முடித்து புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து மக்கள் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.
அதிகாலையிலேயே இறைச்சிக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. வீட்டில் இறைச்சி எடுத்து சமைத்து வழிபட்டு உண்பது வழக்கம் என்பதால், மக்கள் வரிசையில் காத்திருந்து இறைச்சியை வாங்கிச் செல்கின்றனர்.
இறைச்சிக் கடைகளில் அதிகபட்சமாக ஆடு, கோழிகள் விற்பனையாகி வருவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். தொடர் மழையால் மீனவர்கள் கடலுக்குச் செல்வது குறைந்ததால், மீன்களின் வரத்து பல இடங்களில் குறைவாகவே உள்ளது.
இனிப்புக் கடைகள் காலையிலேயே திறக்கப்பட்ட நிலையில், அங்கும் மக்கள் இனிப்புகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் சாலையோர வியாபாரிகளுக்கும் வழக்கத்தை விட விற்பனை அதிகரித்துள்ளது.
பட்டாசுக் கடைகளில் கடந்த ஒருவாரமாகவே பட்டாசு விற்பனை அமோகமாக நடைபெற்று வந்த நிலையில், இன்றும் கடைகளில் கூட்டம் காணப்படுகிறது.
இதையும் படிக்க |இன்று 18 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.