பொங்கல் பண்டிகை 
தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை! வெறிச்சோடும் சென்னை! சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட மக்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு மக்கள் புறப்பட்டதால் வெறிச்சோடி இருக்கிறது சென்னை.

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படவிருக்கும் நிலையில், ஏற்கனவே இதுவரை 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.

இன்று மட்டும் சென்னையிலிருந்து சுமார் 2,790 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவிருப்பதால் இன்னும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு இன்று புறப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இது மட்டுமல்லாமல் சென்னையிலிருந்து இன்றிரவு தென்காசிக்க சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூர் முதல் தென்காசி வழித்தடத்தில் உள்ளவர்கள் இந்த சிறப்பு ரயிலை பயன்படுத்திக் கொள்ள வழிவகை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வார இறுதியில் வருவதால், பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என சனிக்கிழமை வரை விடுமுறை. அதனைத் தொடர்ந்து ஞாயிறும் வார விடுமுறை என்பதால், பலரும் ஜன. 12 மற்றும் 13ஆம் தேதிகளில் சுயவிடுப்பு எடுத்துவிட்டு சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுவிட்டனர்.

இதனால், சென்னை கிளம்பாக்கம் பேருந்து முனையம், முக்கிய ரயில் நிலையங்கள் தொடர்ந்து மூன்று நாள்களாக கூட்டம் அலைமோதியது. இன்றும் இதே நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாள்தோறும் சுமார் 1.20 லட்சம் பேர் வரை சென்னையிலிருந்து சொந்த ஊர் புறப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் இல்லை, கடந்த வார இறுதியிலேயே பொங்கலுக்கு சொந்த ஊருக்குச் செல்வது தொடங்கிவிட்டதால், சென்னை கிட்டத்தட்ட வெறிச்சோடிக் காணப்படுகிறது. சாலைகளில் போக்குவரத்து நெரிசலின்றி, பேருந்துகளில் கூட்டமின்றி, ரயில்களில் அலைமோதும் மக்களின்றி சென்னையே அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறது.

இந்த நிலையே இன்னும் ஒரு சில நாள்களுக்கு நீடிக்கும். இந்த வார இறுதி வரை சென்னை வெறிச்சோடிக் காணப்படும். போக்குவரத்து நெரிசல் இல்லாத சென்னையை சென்னை மக்கள் அனுபவிக்கப் போகிறார்கள் என்று கூட சொல்லலாம்.

போவதற்கு ஒரு ஊர் இல்லையே என்று ஏங்கும் சென்னை வாழ் மக்களுக்கு, இந்த வெறிச்சோடிய சென்னைதான், நான் இருக்கிறேன் என்று இருகரம் கூட்டி அழைத்துக் கொள்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்லையில் அத்துமீறிய டிரோன்கள் : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!

ஈரானுடனான வர்த்தக நாடுகள் மீது அமெரிக்கா 25% வரி விதிப்பு: இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு இல்லை!

காரை நிறுத்தி குழந்தைக்கு பொங்கல் வாழ்த்து சொன்ன நடிகர் சூரி!

டாடா பன்ச் ஃபேஸ்லிப்ட் அறிமுகம்!

போகி பண்டிகை : புதுச்சேரியில் நாளை விடுமுறை!

SCROLL FOR NEXT