வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! தமிழகத்தை நோக்கி நகரும்!

வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று, முன்னதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ளது.

இது, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

இந்த புயல் சின்னம் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால், பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று(அக். 21) ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மித கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The India Meteorological Department has reported that a new low-pressure area has formed in the southwest Bay of Bengal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பருவமழை: ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

மகனைக் கொன்றதாக வழக்கு: பஞ்சாப் முன்னாள் டிஜிபி, மனைவி மீது எஃப்ஐஆர் பதிவு!

தேவதையைப் போல... ஸ்ரேயா சரண்!

மாலை நேரத்து மயக்கம்... பிரணிதா!

எல்லாமே கொண்டாட்டம்... ரேஷ்மா நானையா!

SCROLL FOR NEXT