ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால வலுப்பெற்ற புயல் சின்னம். 
தமிழ்நாடு

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற புயல் சின்னம்!

வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்தது.

இந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது வட தமிழக - தெற்கு ஆந்திரா கடற்கரையை அடுத்த 24 மணி நேரத்துக்குள் நெருங்கும் என்று கூறப்படுகிறது.

இது, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடலோர மாவட்டங்கள், வட தமிழக கடலோர மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The India Meteorological Department has reported that the cyclone formed in the Bay of Bengal has strengthened due to a deep depression.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் அடுத்தடுத்த 2 கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு

தில்லியில் நச்சுப்புகை மூட்டத்தால் காற்று மாசுபாடு

தஞ்சாவூரில் 240 டன் குப்பைகள் சேகரிப்பு

பழவத்தான் கட்டளை வாய்க்கால் பகுதியில் நெல் பயிா் மூழ்கி சேதம்

மலபார் தீபாவளி... ஃபெமினா ஜார்ஜ்!

SCROLL FOR NEXT