மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணை நீர் நிலவரம் பற்றி...
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 3-வது நாளாக புதன்கிழமை காலை 120 அடியாக நீடிக்கிறது.
மேலும், அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 35,500 கனஅடியாக நீடிக்கிறது.
அணையிலிருந்து நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18,300 கனஅடி வீதமும், உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 16,700 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.
மேட்டூரில் 10.6 மி.மீ. மழை பெய்துள்ளது.
summary