தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அவரின் வளர்ப்பு நாயுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
’ரெளடி டைம்’ எனக் குறிப்பிட்டு, நாயைப் பார்த்து சிரிப்பதைப் போன்ற புகைப்படத்தை இன்று (செப். 13) காலை எக்ஸ் தளத்தில் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
தற்போது உதயநிதி ஸ்டாலினின் பதிவு வைரலாகி வரும் நிலையில், சுமார் 6 மணிநேரத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.
மேலும், தெரு நாய் விவகாரம், விஜய்யின் பிரசாரம் ஆகியவற்றை தொடர்புபடுத்தி, அவரது பதிவுக்கு நூற்றுக்கணக்கானோர் காமெண்ட் செய்து வருகின்றனர்.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே, இதே நாயுடன் இருக்கும் புகைப்படங்களை ரெளடி எனக் குறிப்பிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
தவெக தலைவரும் நடிகருமான விஜய், தனது முதல் பிரசாரப் பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்குவதற்காக இன்று காலை தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.