முகப்பு
தமிழ்நாடு

வெடிகுண்டு மிரட்டல்! சென்னை அக்கவுண்ட் ஜெனரல் அலுவலகத்தில் சோதனை!

சென்னை அக்கவுண்ட் ஜெனரல் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பற்றி...

Updated On : 23 செப்டம்பர், 2025 at 11:10 AM
சென்னை அக்கவுண்ட் ஜெனரல் அலுவலகத்தில் வெளியேற்றப்பட்ட ஊழியர்கள்..
பகிர்:

சென்னை தேனாம்பேட்டையில் முதன்மை கணக்காளர் ஜெனரல் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு சோதனை நடைபெற்று வருகிறது.

இந்தியா முழுவதுமே சமீபமாக வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலும் சோதனைக்குப் பின்னர் அவை புரளி என தெரிய வருகிறது.

சென்னையிலும் உயர்நீதிமன்றம், ஜிஎஸ்டி அலுவலகம், வானிலை ஆய்வு மையத்திற்கு கடந்த வாரங்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

இதைத் தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில் முதன்மை கணக்காளர் ஜெனரல்(அக்கவுண்ட் ஜெனரல்) அலுவலகத்திற்கு இன்று(செவ்வாய்க்கிழமை) வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதையடுத்து அங்குள்ள ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது.

வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

summary

Bomb threat to Chennai principal Accountant General office

முழு கட்டுரையைப் படிக்க →