தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் குறித்து, தவெக தலைவர் விஜய்யை தொலைபேசியில் தொடர்புகொண்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியுள்ளார்.
ராகுல் காந்தி கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்தும் விஜய்யுடன் பேசியதுடன், பலியான 41 பேருக்கு இரங்கலும் தெரிவித்துள்ளார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகியுள்ளனர்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் மொத்தம் 51 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 31 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி விசாரித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று(செப். 29) விஜய்யை தொடர்பு கொண்டு கரூர் சம்பவம் குறித்து ராகுல் காந்தி பேசியுள்ளார்.
இதையும் படிக்க: கரூர் பலி: புதிய விசாரணை அதிகாரி நியமனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.