டியூஷன் அக்கா திட்டம்! காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!!
தமிழகத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியாகியிருக்கிறது.
Updated On : 9 ஏப்ரல், 2026 at 4:01 PM
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் அக்கா திட்டம் என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை தமிழக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.