முகப்பு
தமிழ்நாடு

அநீதி, அராஜகம்... திருவள்ளுவர் இன்று இருந்தால் திமுக குறித்து இப்படி எழுதியிருப்பார்! - விஜய்

திருவள்ளுவர் இன்று இருந்திருந்தால் திமுக குறித்து எப்படி திருக்குறள் எழுதியிருப்பார் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

Updated On : 2 பிப்ரவரி, 2026 at 7:36 AM
தவெக தலைவர் விஜய்.
பகிர்:

திருவள்ளுவர் இன்று இருந்திருந்தால் திமுக குறித்து எப்படி திருக்குறள் எழுதியிருப்பார் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை பனையூரில் இன்று நடந்த தவெகவின் 3ஆம் ஆண்டு தொடக்க விழாவில் அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சியாக நாம் வளர்ந்திருக்கிறோம். நாம் மிகப்பெரிய கட்சியாக வளர கோடிக்கணக்கான மக்கள்தான் காரணம். உங்களை நம்பித்தான் நானும், நம் கட்சியும் இருக்கிறோம். அது உங்கள் அனைவருக்கும் தெரியும். 2017க்குப் பிறகு, 2021க்குப் பிறகு தமிழ்நாட்டின் நிலைமையை மக்கள் யோசித்துப் பார்க்கின்றனர். காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் இருந்த இடத்தில் இவர்களும் இருக்கிறார்களே என மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

இன்று இந்த கண்ணீரைத் துடைக்க ஆரம்பித்த இயக்கம்தான் தவெக. இப்படி பேசினால் சிலர் கொந்தளிப்பார்கள். அதைப் பற்றி நாம் கவலைப்படக் கூடாது. அது அவர்கள் வேலை. ஊடகத்தை சந்திக்க மாட்டார். தில்லியை விமர்சிக்க மாட்டார் என என்னைப் பற்றி கிண்டலாகப் பேசுகின்றனர். 1977 மாதிரியே அரதப் பழசான, தேய்ஞ்சுபோன அதே ஆயுதத்தை கையில் எடுக்கின்றனர். காமராஜருக்கு இலக்கியம் என்றால் என்னனு தெரியுமா? புலவரா என கிண்டல் செய்து கொந்தளித்தனர். எம்ஜிஆரின் அனுபவம் தெரியுமா?. விஜய்க்கு என்ன அனுபவம் உள்ளது? எனக் கேட்கின்றனர்.

விஜய்க்கு என்ன அனுபவம் எனப் பேசுகிறவர்கள்தான் அன்று எம்ஜிஆரையும் அப்படிதான் பேசினார்கள். மாபெரும் மக்கள் சக்தியாக நம் தலைமையில் ஒரு அணி, திமுக கூட்டணி, பாஜக தலையில் மற்றும் பலர். எத்தனை அணிகள் வந்தாலும் திமுகவை வீழ்த்துவதற்கு மாபெரும் மக்கள் சக்தியான தவெகவால்தான் முடியும். விஜய் வீட்டை விட்டு வெளியே வா என்கின்றனர். தேர்தலில் ஒவ்வொரு வீட்டில் இருந்து ஒரு விஜய் வாக்களிப்பர். அன்று தெரியும் ஏன் விஜய்யை அழைத்தோம் என நீங்கள் வருத்தப்படுவீர்கள்.

ஒவ்வொரு வீட்டிலும் தவெக இருப்பதை கருத்துக் கணிப்பு எடுப்பவர்கள் பார்க்கலாம். தவெக நகரத்தில்தான் இருக்கிறது, கிராமத்தில் இல்லை என பேசுபவர்கள் இப்படி டெஸ்ட் செய்து பாருங்கள். அம்மா, அப்பா, தங்கைகள், தம்பிகள் தவெகவுக்கு வாக்களிப்பதை யாராலும் தடுக்கவே முடியாது. கட்சித் தொண்டர்கள், அமைச்சர்களின் அட்ராசிட்டியை பார்த்து தூக்கம் வரவில்லை என முதல்வர் கூறியிருக்கிறார். விசில் சின்னத்துக்குதான் வாக்களிப்பேன் என தூக்கத்தில் இருந்து எழுப்பிக் கேட்டால் கூட முதல்வரே கூறுவார்.

டிஜிட்டல் உலகில் திருவள்ளுவர் இருந்திருந்தால் திமுக என்ற தீயசக்தி குறித்து திருக்குறள் எழுதியிருப்பார். அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு என திருவள்ளுவர் எழுதியிருப்பார். பவள விழா பாப்பாவுக்கு என்ன தெரியும்? பழைய டப்பாவை உருட்டத்தானே தெரியும். அதற்காக அவர்கள் செய்யும் தவறை சொல்லாமல் இருக்க முடியுமா? சொல்லிக்கொண்டே இருப்போம். மக்களின் ஒரே பிரதிநிதி நாம் மட்டும்தான், நாம்தானே அவர்களை கேள்வி கேட்க முடியும். மக்களுடைய ஒரே பிரதிநிதி நாமதான். இவ்வாறு குறிப்பிட்டார்.

summary

Vijay has said that if Thiruvalluvar were alive today, he would have written Thirukkural about the evil force that is DMK.

முழு கட்டுரையைப் படிக்க →