முகப்பு
தமிழ்நாடு

ஹிந்தித் திணிப்புக் கிருமியைக் கட்டுப்படுத்தியாக வேண்டும்: கனிமொழி

ரயில் நிலைய பெயர்ப் பலகைகளில் ஹிந்தித் திணிப்பு குறித்து கனிமொழி பதிவு...

Updated On : 5 பிப்ரவரி, 2026 at 4:28 AM
கனிமொழி
பகிர்:

நோய்த்தொற்றைப் போல ஊரெங்கும் பரவும் ஹிந்தித் திணிப்புக் கிருமியைக் கட்டுப்படுத்தியாக வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஒரு சில ரயில் நிலையங்களில் ஹிந்தியை முதன்மைப்படுத்தி பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

அதாவது பெயர்ப் பலகையில் நடுவில் அந்த ஊரின் பெயர், தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும். ஆனால் புதிதாக வைக்கப்படும் பெயர்ப் பலகைகளில் ஹிந்தி நடுவில் இடம்பெற்றுள்ளது.

Advertisement

இதற்கு திமுக உள்ளிட்ட ஆளும் கூட்டணி கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில்,

"நோய்த்தொற்றைப் போல ஊரெங்கும் பரவிடும் இந்த இந்தித் திணிப்புக் கிருமியைக் கட்டுப்படுத்தியாக வேண்டும்.

சென்னை பூங்கா ரயில் நிலையத்தைத் தொடர்ந்து தற்போது சிவகாசியிலும் இந்தியை முதன்மைப்படுத்தி பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

summary

Kanimozhi posts about imposition of Hindi on railway station name boards

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments