மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 22 காளைகளை அடக்கிய வலையங்குளம் பாலமுருகனுக்கு பரிசாக கார் வழங்கப்பட்டது.
மதுரை அவனியாபுரத்தில் இன்று (ஜன. 15) நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண அதிகாலை முதலே பெருந்திரளான மக்கள் திரண்டனர்.
1,100 காளைகளுக்கும், 600 வீரர்களுக்கும் அனுமதியளிக்கப்பட்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 22 காளைகளை அடக்கி, வலையங்குளம் பாலமுருகன் முதலிடம் பிடித்தார். அவருக்குப் பரிசாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கும் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள கார் வழங்கப்பட்டது.
அவரைத் தொடர்ந்து, 17 காளைகளை அடக்கி இரண்டாம் இடம்பிடித்த அவனியாபுரம் கார்த்தி-க்கு பரிசாக இருசக்கர வாகனமும், 16 காளைகளை அடக்கி ரஞ்சித் என்பவர் மூன்றாவது இடமும் பிடித்தார்.
மேலும், சிறந்த காளையாக விருமாண்டி சகோதரர்களின் காளையான முத்து கருப்பன் தேர்வு செய்யப்பட்டு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் டிராக்டரும் பரிசாக வழங்கப்பட்டது.
பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டுப் போட்டியும் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இருப்பினும், மதுரையின் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள்தான் உலகளவில் பிரசித்தி பெற்றவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.