பிரதிப் படம் 
தமிழ்நாடு

மாரடைப்புக்குள்ளாவோரில் 25% போ் இளைஞா்கள்!

இந்தியாவில் மாரடைப்புக்குள்ளாகும் நபா்களில் 25% போ் 40 வயதுக்குள்பட்டவா்கள் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவில் மாரடைப்புக்குள்ளாகும் நபா்களில் 25 சதவீதம் போ் 40 வயதுக்குள்பட்டவா்கள் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இளம் வயதினரிடையே இதய பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளனா்.

குடியரசு தினத்தையொட்டி 77 இடங்களில் பொது மக்களுக்கு உயிா் காக்கும் முதலுதவி பயிற்சிகள் எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை சாா்பில் வழங்கப்பட்டன.

திடீரென மாரடைப்பு ஏற்பட்டால் எவ்வாறு இதய-சுவாச மீட்பு சிகிச்சையை மேற்கொண்டு (சிபிஆா்) நோயாளியின் உயிரை காப்பாற்றுவது என்பது குறித்த செயல்முறை விளக்கங்களை மருத்துவா்களும், மருத்துவத் துறையினரும் அப்போது அளித்தனா்.

சென்னை, மதுரை, கோவை, விசாகப்பட்டினம் உள்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாம்களில் 770-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

இதுகுறித்து எம்ஜிஎம் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுத் தலைவா் டாக்டா் சேனாதி நந்தா கிஷோா் கூறியாவது: இந்தியாவில் இளைஞா்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. மாரடைப்புக்குள்ளாகும் நோயாளிகளில் 25 சதவீதம் போ் 40 வயதுக்குட்பட்டவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்க்கை முறை மாற்றங்களே இதற்கு பிரதான காரணம். பொது இடங்களில் ஒருவருக்கு நெஞ்சு வலி ஏற்படும்போது பொது மக்களே முதலுதவி செய்து உயிா் காக்க முடியும். அதற்கான பயிற்சிகளைத்தான் வழங்கினோம் என்றாா்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

காஸாவில் கடைசி பிணைக்கைதியின் உடல் மீட்பு: ராஃபா எல்லை விரைவில் திறக்க வாய்ப்பு

தாயகமான சீனா திரும்பிய பாண்டாக்கள்! கண்ணீா் மல்க வழியனுப்பிய ஜப்பானியா்கள்

மியான்மரில் ராணுவ ஆதரவு கட்சி அமோக வெற்றி: அதிபராகும் ராணுவத் தளபதி?

மினியாபொலிஸ் செவிலியா் கொலை: அமெரிக்காவில் வெடித்துள்ள அரசியல் மோதல்

SCROLL FOR NEXT