தவெக தலைவர் விஜய் | முதல்வர் ஸ்டாலின் 
தமிழ்நாடு

கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம்; பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் இல்லை: விஜய்

தமிழகத்தில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிர்ச்சியளிப்பதாக திமுக அரசு மீது விஜய் குற்றச்சாட்டு

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிர்ச்சியளிப்பதாக திமுக அரசு மீது தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.

தவெக தலைவர் விஜய், தனது எக்ஸ் பக்கத்தில் "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது என்பதற்குச் சான்றாக நாள்தோறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தலைநகர் சென்னையில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களால் தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

சென்னை அடையாறு பகுதியில் காவலாளியாக வேலை பார்த்து வந்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியும் அவர் மனைவியும் குழந்தையும் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும், நந்தனத்தில் அரசுக் கல்லூரி கேண்டீனில் பணிபுரிந்த இளம்பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன.

இச்சம்பவங்கள், கடும் கண்டனத்திற்கு உரியவை. தமிழ்நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை, பிழைப்புக்காகத் தமிழ்நாட்டை நம்பி வந்தவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற சூழலைத்தான் இந்தக் கபட நாடகத் திமுக அரசு உருவாக்கி வைத்திருக்கிறது.

கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதால், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களைத் தடுப்பதிலும், சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும் இந்த ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துவதில்லை.

இதனால்தான் கல்வி நிறுவனங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரிக்கின்றன. குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டிய அரசு, மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதால், கொடுங்குற்றங்களில் ஈடுபடச் சமூக விரோதக் கும்பல்களுக்குத் துணிச்சல் வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தர உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், முதல்வர் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்றும், எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்றும் வாய்கூசாமல் பொய்யையே திரும்பத் திரும்பக் கூறி வருகிறார்.

ஆட்சியின் இறுதிக் கால நாள்களை எண்ணிக்கொண்டிருக்கும் முதல்வர், இனி இருக்கும் கொஞ்சம் நாள்களிலாவது சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மக்களுக்கு எதிரான, மக்களுக்குக் கொஞ்சமும் பாதுகாப்பே இல்லாத, இந்த வெற்று விளம்பர மாடல் ஆட்சிக்கு முடிவுரை எழுதத் தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

TVK Vijay criticizes the DMK government, stating that the incidents of sexual assault in Tamil Nadu are shocking

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராக் ஸ்டார் இயக்குநரின் புதிய பட வெளியீட்டுத் தேதி!

காவல்துறையினருக்கு பிறந்தநாள், திருமண நாளில் சிறப்பு விடுப்பு..! -கர்நாடக டிஜிபி உத்தரவு

பிகார் இளைஞரின் குடும்பத்தை கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

தைப்பூசம்: விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

கேரள முதல்வர் வேட்பாளராக சசி தரூர்..? ராகுல், கார்கேவுடன் சந்திப்பு!

SCROLL FOR NEXT