முகப்பு
தமிழ்நாடு

இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.

Updated On : 24 ஜூன் 2026, 7:29 pm IST
பகிர்:
Updated On : 24 ஜூன் 2026, 7:29 pm IST

சாதி குறித்து அவதூறு பேச்சு! எஸ்சி ஆணையத்தில் மன்னிப்பு கோரிய மத்திய அமைச்சர்!

சாதி குறித்து அவதூறாகப் பேசியதற்காக மத்திய இணையமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டூ, பஞ்சாப் மாநில பட்டியலினர் ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரியுள்ளார்.

Updated On : 24 ஜூன் 2026, 7:27 pm IST

கட்சி மேடைகளில் தவிர்க்க வேண்டியதை, பேரவையில் பேசலாமா? திருமாவளவன்

கட்சி மேடைகளில் கூட தவிர்க்க வேண்டியதை சட்டப்பேரவையில் பேசலாமா? என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Updated On : 24 ஜூன் 2026, 6:56 pm IST

விமானம் ஓட்டும் அனுபவம்! கூகுள் குரோமில் பெறுவது எப்படி?

கூகுள் குரோமை பயன்படுத்தி விமானம் ஓட்டும் அனுபவத்தைப் பெறும் வகையிலான மேம்படுத்தப்பட்ட அம்சத்தை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.

Advertisement

Advertisement

இதுவரை கணினியில் சிறப்பு மென்பொருள்களில் மட்டுமே கிடைத்த விமான இயக்கி வசதியை இனி, கூகுள் எர்த் மூலம் பெறலாம் என கூகுள் தெரிவித்துள்ளது.

Updated On : 24 ஜூன் 2026, 6:56 pm IST

பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை!

முதல்வர் விஜய்யின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

Updated On : 24 ஜூன் 2026, 5:24 pm IST

பாஜக கவுன்சிலர்கள் பதவியேற்பு செல்லாது!

திருவனந்தபுரம் மாநகராட்சியில் விருப்ப தெய்வங்கள் மற்றும் தலைவர்களின் பெயர்களைக் கூறி பதவியேற்ற 20 கவுன்சிலர்களின் பதவிப்பிரமாணம் செல்லாது என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Updated On : 24 ஜூன் 2026, 4:26 pm IST

முட்டை நீக்கம்

கொல்கத்தா மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தில் இருந்து முட்டையை நீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 24 ஜூன் 2026, 3:35 pm IST

தண்டவாளத்தில் குதித்த பயணி

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் பயணி ஒருவர் குதித்ததால் ரயில் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 24 ஜூன் 2026, 3:11 pm IST

தமிழ் உள்ளவரை கண்ணதாசனின் படைப்புகளும் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய் புகழாரம்

Updated On : 24 ஜூன் 2026, 3:11 pm IST

மின் துறையில் 70,000 காலிப் பணியிடங்கள்! இந்த ஆண்டு 15,000 இடங்கள் நிரப்பப்படும்! நிர்மல்குமார்

Updated On : 24 ஜூன் 2026, 2:29 pm IST

அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிப்பு!

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 24 ஜூன் 2026, 2:08 pm IST

பாஜக + திமுக + அதிமுக எனும் கொள்கை புடலங்காய்!

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகத்தை விமர்சித்து வெளியான கட்டுரைக்கு அக்கட்சி எதிர்வினையாற்றியுள்ளது.

Updated On : 24 ஜூன் 2026, 2:07 pm IST

திமுகவின் மறுபிரதியே தவெக

ஹிந்துக்களின் உணர்வுகளை அவமதிப்பதில் முந்தைய திமுகவின் மறுபிரதியாகவே தவெக அரசும் செயல்படுவதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். கேசவன் புதன்கிழமை கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

Updated On : 24 ஜூன் 2026, 2:07 pm IST

மக்கள் வருத்தம்

தவெகவுக்கு வாக்களித்த மக்கள் வருத்தப்படுகிறார்கள் என்று சென்னை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஆர். பிரியா தெரிவித்துள்ளார்.

Updated On : 24 ஜூன் 2026, 11:44 am IST

தரிசன கட்டணம் உயர்வில்லை

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசன கட்டணங்கள் உயர்த்தப்பட்டனவா? என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

Updated On : 24 ஜூன் 2026, 11:44 am IST

கண்ணதாசன் சிலைக்கு மரியாதை

கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On : 24 ஜூன் 2026, 11:44 am IST

நிறைமாத கர்ப்பிணிக்காக மேடையைவிட்டு இறங்கிய முதல்வர்

மின்சாரத் துறைக்குத் தேர்வானவர்களுக்கு இன்று பணி நியமன ஆணை வழங்கப்பட்டு வரும் நிலையில், நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு முதல்வர் விஜய் மேடையில் இருந்து இறங்கிவந்து பணி நியமன ஆணை வழங்கியுள்ளார்.

Updated On : 24 ஜூன் 2026, 11:44 am IST

ரஜினிகாந்த் 173

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 173-வது படத்தின் இயக்குநர் மற்றும் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 24 ஜூன் 2026, 11:44 am IST

டெண்டர் ரத்து

திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை தமிழ்நாடு அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Updated On : 24 ஜூன் 2026, 11:44 am IST

தங்கம், வெள்ளி விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூன் 24) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது.

Updated On : 24 ஜூன் 2026, 11:44 am IST

ரொனால்டோ இரட்டை கோல்

பிஃபா உலகக்கோப்பையில் உஸ்பெகிஸ்தான் அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய போர்ச்சுகல் அணி வெற்றி பெற்றது.

Updated On : 24 ஜூன் 2026, 11:44 am IST

குழந்தைத் தொழிலாளர்களா?

திருவள்ளூர் அமோனியா வாயு கசிவில் பலியானோரில் 2 சிறுமிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Updated On : 24 ஜூன் 2026, 11:44 am IST

ரவி மோகன் வீட்டில் திருட்டு!

நடிகர் ரவி மோகன் வீட்டில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான வைர நகை மற்றும் ரூ. 3 லட்சம் ரொக்கம் திருட்டு என காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 24 ஜூன் 2026, 11:44 am IST

அதிபர் டிரம்ப்க்கு எதிராக தீர்மானம்

ஈரானுக்கு எதிரான போரில் வளைகுடா நாடுகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆயுதப் படைகளைத் திரும்ப பெற அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments