பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது : ஆளுநர் அர்லேகர்
விஜய் ஆட்சி அமைக்க அழைக்காதது ஏன்? என்பது குறித்து ஆளுநர் அர்லேகர் விளக்கம் அளித்துள்ளது குறித்து...
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 118 இடங்களைக் காட்டாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளார்.
எந்தெந்தக் கட்சியினர் ஆதரவு தருகிறார்கள் என்பதைக் கூற வேண்டும் என்றும், விஜய் வேறு எந்தக் கட்சியையும் பெரும்பான்மையில் காட்டி ஆட்சி அமைக்கக் கோரலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இது குறித்து அளித்துள்ள பேட்டியில், விஜய் பதவியேற்பதை நான் தடுப்பதாக எப்படி கூற முடியும்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement
இது தொடர்பாக மேலும் அவர் பேசியதாவது:
''பெரும்பான்மை இல்லாத கட்சியை ஆட்சி அமைக்க எப்படி அழைக்க முடியும்? விஜய் பதவியேற்பதை நான் தடுக்கவில்லை. விஜய் ஆட்சி அமைப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், விஜய்யிடம் பெரும்பான்மை இல்லை. பெரும்பான்மை எண்ணுடன் வந்தால் ஆட்சி அமைக்க அழைக்கத் தயார்.
திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க உரிமைகோரினாலும் அது சாத்தியம். பெரும்பான்மை இல்லாதது விஜய்க்கு மட்டும் பிரச்னை இல்லை, ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பிரச்னை
மைனாரிட்டி ஆட்சி அமைத்து குதிரை பேரம் நடத்துவதை அனுமதிக்க முடியாது. இதே நிலை நீடித்தால டுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.