முகப்பு
தமிழ்நாடு

விஜய்யை ஆளுநர் அலைக்கழிப்பதற்கு இதுதான் காரணமா? தவெகவினர் கூறுவது என்ன?

விஜய்யை ஆளுநர் அலைக்கழிப்பதற்கான காரணமாக தவெகவினர் கூறுவது குறித்து...

தவெக தலைவர் விஜய் - ஆளுநர் ஆர்.வி. ஆர்லேக்கர்.
பகிர்:

தவெக தலைவர் விஜய்யை ஆளுநர் அலைக்கழிப்பதாக தவெகவினர் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெக தலைவர் விஜய்க்கு ஆளுநர் 3 முறை மறுப்பு தெரிவித்ததற்கு, தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள்தான் காரணம் என தவெகவினர் கூறி வருகின்றனர்.

தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளில், தமிழ்நாட்டின் நிதி மற்றும் மாநில உரிமைகள் பாதுகாப்பு என்ற தலைப்பின்கீழ், தவெக ஆட்சியமைந்தவுடன் ஆளுநர் பதவியை ரத்து செய்ய தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்று தெரிவித்திருந்தனர்.

Advertisement

இதனைக் காரணங்காட்டியே, தவெக ஆட்சியமைப்பதில் விஜய்யை ஆளுநர் அலைக்கழிப்பதாக சமூக ஊடகங்களில் தவெகவினர் கூறுகின்றனர்.

தவெக வாக்குறுதி - TVK Manifesto

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தபோதிலும், ஆட்சியமைப்பதில் தொடர் சிக்கல் நீடித்து வருகிறது.

107 இடங்களை வென்ற தவெக, 5 இடங்களை வென்ற காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் கோரிக்கை விடுத்தது. இருப்பினும், 118 சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே அழைப்பு விடுக்க முடியும் என ஆளுநர் திட்டவட்டமாகக் கூறி விட்டார்.

தொடர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவைப் பெற்று, மீண்டும் ஆளுநரை தவெக தலைவர் விஜய் சந்தித்தார். இருந்தபோதிலும், இன்னும் 2 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேவை என ஆளுநர் மாளிகையில் விஜய்க்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

summary

Is this the reason why the Governor is giving TVK Vijay the runaround?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.