மே 14-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பற்றி...
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் (மே 14) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சியை இழந்து எதிர்க்கட்சியாக உள்ளது. திமுக தொடர்ந்து 2-ம் முறையாக ஆட்சியமைக்கும் என்று மு.க. ஸ்டாலின் கூறிய நிலையில் திமுக பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. சில கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது.
இந்நிலையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் (மே 14 ஆம் தேதி) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
"கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் "தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்" 14-05-2026 வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம் “கலைஞர் அரங்கில்" நடைபெறும்.
அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.