முகப்பு
வணிகம்

சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு

வாரத்தின் முதல் நாளான இன்று (ஆக. 2) பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 360 புள்ளிகள் வரை உயர்ந்தது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:51 AM
பகிர்:

வாரத்தின் முதல் நாளான இன்று (ஆக. 2) பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 360 புள்ளிகள் வரை உயர்ந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 363.79 புள்ளிகள் உயர்ந்து 52,950.63 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. இது மொத்த வர்த்தகத்தில் இது 0.69 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 122.10 புள்ளிகள் உயர்ந்து 15,885.15 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.77 சதவிகிதம் உயர்வாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 21 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டது. 

அதிகபட்சமாக டைட்டன் கம்பெனி பங்குகள் 3.25 சதவிகிதமும், எம்&எம் 1.97 சதவிகிதமும், ரிலையன்ஸ் 1.77 சதவிகிதமும், ஆக்சிஸ் வங்கி 1.69 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டது. 

முழு கட்டுரையைப் படிக்க →