வணிகம்

ஜனவரி முதல் வாகனங்களின் விலையை உயர்த்துவதாக டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு!

DIN

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜனவரி 1 முதல் வணிக வாகனங்களின் விலையை 3 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. 

முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக விளங்கிவரும் டாடா மோட்டார்ஸ் தனது வணிக வாகனங்களின் விலையை 2024-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் 3 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது.

தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புச் செலவு அதிகரிப்பை ஈடுகட்டுவதற்காக விலை உயர்த்துவதாக கூறியுள்ளது. 

இந்த விலையுயர்வு தங்கள் நிறுவனத்தின் வணிக வாகனங்கள் முழுமைக்கும் பொருந்தும் என்று டாடா மோட்டார்ஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மாருதி சுஸுகி, ஹூண்டாய் மோட்டார் இந்தியா, மஹிந்திரா & மஹிந்திரா, ஹோண்டா மற்றும் ஆடி போன்ற வாகன தயாரிப்பு நிறுவனங்களும் ஜனவரியில் வாகன விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பங்கு வர்த்தகம் சரிவு: ரூ.2 லட்சம் கோடி இழந்த முதலீட்டாளர்கள்

பொருளாதாரத்தை மேம்படுத்த கஞ்சாவை சட்டபூர்வமாக்கும் பாகிஸ்தான்!

வாகனங்களில் ஸ்டிக்கர்: மருத்துவர்களுக்கு அனுமதி தர மறுப்பு!

தெலங்கானாவில் ஓட்டு கேட்க பிரதமர் மோடிக்கு உரிமை இல்லை: முதல்வர் ரேவந்த் ரெட்டி

இந்தியன் - 28!

SCROLL FOR NEXT