ஸ்டார் ஹெல்த் 
வணிகம்

ஹோம் ஹெல்த்கேர் சேவையை விரிவுபடுத்தும் ஸ்டார் ஹெல்த்!

ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் தனது ஹோம் ஹெல்த் கேர் முயற்சிகளை நாடு முழுவதும் 100 இடங்களில் விரிவுபடுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

DIN

சென்னை: ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் தனது ஹோம் ஹெல்த் கேர் முயற்சிகளை நாடு முழுவதும் 100 இடங்களில் விரிவுபடுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

ஜூலை 2023ல் தொடங்கப்பட்ட இந்த முயற்சியானது, ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் வாடிக்கையாளர் தளத்தில் 85% உள்ளடக்கியது. இது ரொக்கமில்லா மருத்துவ பராமரிப்பு சேவையை வீட்டு வாசலில் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

தரமான மருத்துவ சேவையை வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமாக கொண்டு வருவதன் மூலம், அவர்களின் ஆறுதலையும் மன அமைதியையும் உறுதி செய்வதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்றார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஆனந்த் ராய்.

மும்பை, தில்லி மற்றும் புனே ஆகிய நகரங்கள் இந்த சேவைகளை ஏற்றுக்கொள்வதில் தீவிரமாக உள்ளன. சேவைகளின் முதன்மையாக வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு ஆகியவற்றுக்கு சிகிச்சையளிப்பதில் கவனம் செலுத்துகிறோம். இதனால் 15,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் வீட்டு சுகாதார பராமரிப்பு திட்டத்தின் மூலம் பயனடைவர்.

கேர் 24, போர்ட்டியா, அதுல்யா மற்றும் அப்பல்லோ உள்ளிட்ட முன்னணி சுகாதார வழங்குநர்களுடனான கூட்டமைப்பு மூலம் இந்த திட்டத்தின் விரிவாக்கம் எளிதாக்கப்பட்டுள்ளது என்றது நிறுவனம்.

இதையும் படிக்க: ரூ.3,200 கோடியில் சிமெண்ட் ஆலையை அமைக்கும் ஸ்டார் சிமெண்ட்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT