இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று (நவ. 26) உயர்வுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 393 புள்ளிகள் உயர்வுடனும் நிஃப்டி 26,000 புள்ளிகளுக்கு அருகேவும் வணிகத்தின் தொடக்கம் இருந்தது.
காலை 11 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 710 புள்ளிகளும் நிஃப்டி 26,088 புள்ளிகள் வரையும் வணிகமானது. குறிப்பாக ஆயில், ஸ்டீல், நிதி, ஏற்றுமதி, வங்கித் துறை பங்குகள் ஏற்றத்துடன் வணிகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வணிக நேரத் தொடக்கத்தில் 393 புள்ளிகள் உயர்ந்து 84,503 ஆக வணிகமானது. காலை 11 மணி நிலவரப்படி 715 புள்ளிகள் உயர்ந்து 85,302.32 புள்ளிகளாக வணிகமாகி வருகிறது.
இதேபோன்று தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி வணிக நேரத் தொடக்கத்தில்
25,842 புள்ளிகளாக வணிகமானது. காலை 11 மணிநிலவரப்படி 221 புள்ளிகள் உயர்ந்து 26,106 புள்ளிகளாக வணிகமாகி வருகிறது.
29 நிறுவனப் பங்குகள் உயர்வு
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 29 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடனே வணிகமாகி வருகின்றன. பார்தி ஏர்டெல் பங்கு மட்டும் -1.58% சரிவைக் கண்டுள்ளது.
அதிகபட்சமாக அதானி போர்ட்ஸ் நிறுவனப் பங்குகள் 2% உயர்வுடன் காணப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக ஆக்சிஸ் வங்கி 1.88%, இந்தஸ்இந்த் வங்கி 1.86%, டாடா ஸ்டீல் 1.72%, பஜாஜ் ஃபைனான்ஸ் 1.66%, பஜாஜ் ஃபின்சர்வ் 1.54%, ரிலையன்ஸ் 1.4%, எல்&டி 1.43%, டாடா மோட்டார்ஸ் 1.47% உயர்வுடன் வணிகமாகி வருகின்றன.
இதேபோன்று நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் 3.41%, ஆக்சிஸ் வங்கி 1.98%, அதானி போர்ட்ஸ் 2%, ஸ்ரீராம் ஃபைனான்ஸ் 2.05%, ட்ரெண்ட் 1.84%, இண்டர்குளோப் 1.84%, எச்.டி.எஃப்.சி. லைஃப் 1.7%, ஜியோ ஃபினான்ஷியல் 1.39% உயர்ந்துள்ளன.
இதையும் படிக்க | கல்வி உதவித் தொகை: விண்ணப்பங்களை வரவேற்கும் முத்தூட் ஃபைனான்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.