புதுதில்லி: சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி இந்தியா, இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ஆண்டுக்கு ஆண்டு 18 சதவிகிதம் சரிந்து அதன் விற்பனையானது 3,197 கார்களாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில் நிறுவனம் 3,889 கார்களை விற்பனை செய்தது.
எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அர்த்தமுள்ள அனுபவங்களை உருவாக்குவதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம் என்றார் ஆடி இந்தியாவின் தலைவர் பல்பீர் சிங் தில்லான்.
அதே வேளையில் ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில் நிறுவனத்தின் பழைய கார்களின் வணிகம் ஆண்டுக்கு ஆண்டு 5 சதவிகிதம் வளர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது ஆடி இந்தியா.
இதையும் படிக்க: மாருதி சுசுகியின் உற்பத்தி 26% உயர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.