பங்குச் சந்தைகள் இன்று(வெள்ளிக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 82,075.45 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10.50 மணியளவில் சென்செக்ஸ் 341.34 புள்ளிகள் அதிகரித்து 82,513.44 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 100.25 புள்ளிகள் உயர்ந்து 25,282.05 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
4 நாள்கள் ஏற்றத்திற்குப் பிறகு பங்குச்சந்தை கடந்த புதன்கிழமை சரிவடைந்த நிலையில் நேற்று ஏற்றத்துடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து 2-ஆவது நாளாக இன்றும் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
இந்திய - அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தை, அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்தது உள்ளிட்டவை பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 0.18 சதவீதமும் நிஃப்டி ஸ்மால்கேப் 100, 0.28 சதவீதமும் உயர்ந்தது.
துறை ரீதியாக, நிஃப்டி ரியாலிட்டி சுமார் 1.5 சதவீதம் உயர்ந்து அதிக லாபம் ஈட்டியது, தொடர்ந்து பொதுத்துறை வங்கி, எஃப்எம்சிஜி, நிதி சேவைகள், ஆட்டோ, பார்மா, ஹெல்த்கேர், நுகர்வோர் பொருள்கள், ஆட்டோ மற்றும் எண்ணெய் & எரிவாயு ஆகியவை ஏற்றத்தில் உள்ளன. நிஃப்டி மெட்டல் குறியீடு 1.4 சதவீதம் குறைந்துள்ளது.
சென்செக்ஸில் இன்ஃபோசிஸ், எச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா அதிக லாபம் ஈட்டிய அதே நேரத்தில் பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவைச் சந்தித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.