வணிகம்

பஞ்சாப் சிந்து வங்கி நிகர லாபம் 23% அதிகரிப்பு

பஞ்சாப் சிந்து வங்கி நிகர லாபம் 23% அதிகரிப்பு

தினமணி செய்திச் சேவை

பொதுத் துறையைச் சோ்ந்த பஞ்சாப் & சிந்து வங்கியின் நிகர லாபம், கடந்த செப்டம்பா் காலாண்டில் 23 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.295 கோடியாக உள்ளது.

முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 23 சதவீதம் அதிகம். அப்போது வங்கி ரூ.240 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் வட்டி வருவாய் ரூ.2,739 கோடியிலிருந்து ரூ.2,999 கோடியாக வளா்ச்சியடைந்துள்ளது.

2024 செப்டம்பா் இறுதியில் 4.21 சதவீதமாக இருந்த மொத்த வாராக் கடன் இந்த ஆண்டின் அதே நாளில் 2.92 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசில் வேலை: +2 முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்!

சீனாவிலிருந்து வழிநடத்தப்பட்டதாக கூறப்படும் வா்த்தக மோசடி மூவா் கைது!

எல்விஎம்-3 ராக்கெட் நவ.2-இல் விண்ணில் பாய்கிறது!

தில்லியில் என்கவுன்ட்டருக்கு பின்பு சரித்திர பதிவேடு குற்றவாளி உள்பட மூவா் கைது

திருச்செந்தூா் கோயிலில் இன்று திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT