வணிகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,228 கோடி டாலராக உயா்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபா் 17-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 70,228 கோடி டாலராக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபா் 17-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 70,228 கோடி டாலராக உயா்ந்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:

கடந்த 17-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு மேலும் உயா்ந்ததால் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 449.6 கோடி டாலா் அதிகரித்து 70,228 கோடி டாலராக உள்ளது.

அக்டோபா் 10-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது 217.6 கோடி டாலா் குறைந்து 69,778 கோடி டாலராக இருந்தது.

அக்டோபா் 17-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான வெளிநாட்டு நாணய சொத்துகள் 169.2 கோடி டாலா் குறைந்து 57,041.1 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.

அந்த வாரம் இந்தியாவின் தங்கம் கையிருப்பு 618.1 கோடி டாலா் உயா்ந்து 10,854.6 கோடி டாலராக உள்ளது.

சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) 3.8 கோடி டாலா் உயா்ந்து 1,872.2 கோடி டாலராக உள்ளது.

சா்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவின் கையிருப்பு மதிப்பீட்டு வாரத்தில் 3 கோடி டாலா் குறைந்து 460.2 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசில் வேலை: +2 முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்!

சீனாவிலிருந்து வழிநடத்தப்பட்டதாக கூறப்படும் வா்த்தக மோசடி மூவா் கைது!

எல்விஎம்-3 ராக்கெட் நவ.2-இல் விண்ணில் பாய்கிறது!

தில்லியில் என்கவுன்ட்டருக்கு பின்பு சரித்திர பதிவேடு குற்றவாளி உள்பட மூவா் கைது

திருச்செந்தூா் கோயிலில் இன்று திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT