முகப்பு
இளைஞர்மணி

இணைய வெளியினிலே...

வளைந்து  கொடுப்பதுநிமிர்வதற்காகத் தான். 

இளைஞர்மணி

இணைய வெளியினிலே...

வளைந்து  கொடுப்பதுநிமிர்வதற்காகத் தான். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:37 AM
பகிர்:

முக நூலிலிருந்து....

ஒட்டிக்  கொண்டிருப்பதில்லை.
வெட்டிக் கொள்ள முடியுமா 
என்றும் தெரியவில்லை.
பாதி நிலவு தேய்ந்துவிட்டாலும்,
பார்த்துக் கொண்டே கடந்து
விடத் தோதாக
இந்தப் பாதை
ஒரு நதிக்கரையோடுதான் போகிறது.
எல்லாம் ஏதோ ஒரு 
சமாதானந்தான்
வேறெப்படி வாழ்வதாம்?

உமா மோகன்


வளைந்து  கொடுப்பது
நிமிர்வதற்காகத் தான். 

உமா மகேஸ்வரி பால்ராஜ்



எழுதி  நிறுவிக் கொள்வான் எழுத்தாளன்.
இசைந்து இசைத்து நிறுவிக் கொள்வான் இசைஞன்.
ஆய்ந்தாய்ந்து நிறுவிக் கொள்வான் விஞ்ஞானி.
பெய்தும் பொய்த்தும் நிறுவிக் கொள்ளும் மழை.

டிகே கலாப்ரியா

சுட்டுரையிலிருந்து...


முன்நோக்கி செல்லுமே தவிர,
ஒருபோதும் 
பின்நோக்கி சுற்றியதில்லை...
கடிகாரம். 

படிக்காதவன்

தனிமை சலிக்கவில்லை;
நான்கு பக்க சுவர்கள்தான் சலித்துப் போனது
வெட்டவெளியில் 
ஒரு நீண்ட தனிமை 
வேண்டும். 

சரண்யா ராஜ்

கோபம்  தேவைப்படும் போது
கேடயமாக  இருக்கலாமே தவிர...
ஒரு போதும் 
ஆயுதமாக மாறக் கூடாது.

சிறகுகள்


வலைதளத்திலிருந்து...

வெகுஜன எழுத்தின் இன்னொரு வடிவமே திரைப்பாடல். அதில் இலக்கிய நுகர்வுக்கு இடமுண்டு. எனினும், அதுமட்டுமே குறிக்கோளல்ல. சந்தம், காட்சி, கதை, சூழல் என சகல விஷயங்களையும் கவனித்தே ஒரு திரைப்பாடல் எழுதப்படுகிறது.  அவ்விதம் உள்வாங்கினால் தேய்வழக்கு, படிமம், குறியீடு, அநுபூதி போன்ற பஞ்சாயத்துகள் வரவே வராது.

ஒருவருடைய ஆளுமையை நிறுத்துப் பார்க்க, காகிதத்தில் எழுதியவற்றையே கணக்கிலெடுக்க வேண்டும். அப்படியல்லாமல், அதில் இதையும் இதில் அதையும் தேடி விமர்சன கத்திக்குச் சாணைத் தீட்டுவது, போதாமை. 

கவிஞனுக்கான அளவுகோலில் பாடலாசிரியனை மதிப்பிடுவது பாமரத்தனமென்று நல்ல இலக்கிய ஆளுமைகளுக்குத் தெரியாமலில்லை. நம்மவர்களும் நவீன சுப்புடுகளாவதை ரசிக்கலாம். அவர்களிடமும் கற்கலாம்.

https://yugabharathi.wordpress.com/

முழு கட்டுரையைப் படிக்க →