முகப்பு
மகளிர்மணி

கடற்படை ஹெலிகாப்டர்களை இயக்கவுள்ள மகளிர்!

இந்திய விமானப்படைக்கு பிரான்சில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்படுகின்றன. இதில் முதல் தொகுதியாக 5 விமானங்கள் கடந்த ஜூலை மாதம் இந்தியா வந்தடைந்தன. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

இந்திய விமானப்படைக்கு பிரான்சில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்படுகின்றன. இதில் முதல் தொகுதியாக 5 விமானங்கள் கடந்த ஜூலை மாதம் இந்தியாவந்தடைந்தன.

நவீன ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கையாளும் திறன் பெற்ற இந்த தாக்குதல் ரக விமானங்களை இயக்குவதற்கு சிறப்பு பயிற்சி பெற வேண்டும். இதற்காக இந்திய விமானப்படை வீரர்களுக்கு பிரான்சில் பயிற்சி அளிக்கப்பட்டு இருந்தது.

இந்தியா வந்துள்ள ரஃபேல் போர் விமானங்கள் பயிற்சி மற்றும் கண்காணிப்பு பணிகளை ஏற்கெனவே தொடங்கி உள்ளன.

இந்த நிலையில் ரஃபேல் போர் விமானங்களை இயக்குவதற்கு பெண் விமானிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையில் பணியாற்றி வரும் துணை லெப்டினன்ட் குமுதினி தியாகி மற்றும் துணை லெப்டினன்ட் ரிதி சிங் ஆகிய 2 பெண் அதிகாரிகள் முதல் முறையாக போர்க்கப்பல்களில் இருந்து கடற்படை ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இந்தப் பெண் அதிகாரிகள் தங்கள் கன்ட்ரோலில் இருக்கும் சென்ஸார் உதவியைப் பயன்படுத்தி, எதிரியின் நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களை பற்றி ஹெலிகாப்டரில் இருப்பவர்களுக்குத் தகவல் கொடுக்க, அவர்கள் தாக்குதலைத் தொடங்குவார்கள்.

கடற்படையின் "அப்சர்வர்' பயிற்சியை முடித்த இவர்கள் உள்பட 17 பேருக்கு சமீபத்தில் கொச்சியில் ஐ.என்.எஸ். கருடா போர்க்கப்பலில் வைத்து பட்டங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கடற்படை ஊழியர் தலைமை அதிகாரி (பயிற்சி) ஆன்டனி ஜார்ஜ், "கடற்படை கப்பல்களில் இருந்து ஹெலிகாப்டர்களை இயக்க பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் முன்னணி போர்க்கப்பல்களில் பெண்களும் பணியாற்றும் வாய்ப்பு ஏற்பட்டு இருப்பதாக' கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →