மகளிர்மணி

தேங்காய் - எள் பூரணம் 

ஒரு கிண்ணம் தேங்காய்த் துருவலுக்கு ஒரு கிண்ணம் வெல்லம் சரிக்கு சரியாக இருந்தால் தான் இனிப்பு சரியாக இருக்கும். வெல்லம் கரைவதற்கு சிறிது தண்ணீர் விட்டு, அதில் வெல்லத்தைப் போட்டு அடுப்பில் வைத்து நன்கு

ஏ.சந்துரு

தேவையானவை: 

தேங்காய்த் துருவல் - ஒரு கிண்ணம்
வெல்லம் - 1 கிண்ணம்
வறுத்த கருப்பு எள் - 2 தேக்கரண்டி
வறுத்த வேர்கடலை - 3 தேக்கரண்டி 


செய்முறை:  

ஒரு கிண்ணம் தேங்காய்த் துருவலுக்கு ஒரு கிண்ணம் வெல்லம் சரிக்கு சரியாக இருந்தால் தான் இனிப்பு சரியாக இருக்கும். வெல்லம் கரைவதற்கு சிறிது தண்ணீர் விட்டு, அதில் வெல்லத்தைப் போட்டு அடுப்பில் வைத்து நன்கு கரைய விடவும். ஓரளவுக்கு கெட்டியானதும் இறக்கி வடிக்கட்டிக் கொள்ளவும். ஒரு வாணலியில் தேங்காய், எள், ஒன்றிரண்டாக பொடித்த வறுத்த வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்து, அதனுடன் வடிகட்டி வைத்திருக்கும் வெல்லத்தை ஊற்றி அதை நன்கு கிளறவும். கலவை ஒன்றாக சேர்ந்து கெட்டியான பதம் வந்ததும் இறக்கிவிடவும். தேங்காய் எள் இனிப்பு பூரணம் ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யு22 ஆசிய குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் 4 இந்தியா்கள்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி

ஆசிய கோப்பை கூடைப்பந்து: போராடித் தோற்றது இந்தியா

சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு

சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT