மகளிர்மணி

லட்டு 

வாணலியில் எண்ணெய்யைக் காய வைக்கவும். கடலை மாவை நீர் விட்டு இட்லி மாவு பதத்துக்குக் கரைத்து, பூந்திக் கரண்டியில் ஊற்றி, காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெய்யில் தேய்க்கவும்.

ஏ.சந்துரு


தேவையானவை:

கடலை மாவு - 2 கிண்ணம்
சர்க்கரை - 3 கிண்ணம்
லெமன் ஃபுட்கலர் - கால் தேக்கரண்டி
ஏலக்காய்பொடி - அரை தேக்கரண்டி
நெய் - 6  தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
உடைத்த முந்திரிப் பருப்பு - 3 தேக்கரண்டி


செய்முறை: 

வாணலியில் எண்ணெய்யைக் காய வைக்கவும். கடலை மாவை நீர் விட்டு இட்லி மாவு பதத்துக்குக் கரைத்து, பூந்திக் கரண்டியில் ஊற்றி, காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெய்யில் தேய்க்கவும். ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு, வெந்த பூந்திகளை வடிசட்டியில் போடவும். எண்ணெய் நன்றாக வடிந்து விடும். கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு மூழ்கும் வரை, நீர் ஊற்றி ஃபுட் கலர் சேர்த்து பாகு தயாரிக்கவும். ஏலக்காய்ப்பொடி சேர்க்கவும். பாகு கொதிக்கும்போது இடையிடையே நெய் விடவும். பாகு கொதி வந்ததும் இறக்கி மீதியுள்ள நெய்யில் முந்திரியை வறுத்துச் சேர்க்கவும். பூந்தியைச் சேர்த்து நன்றாகக் கலந்து லட்டாகப் பிடிக்கவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுபிஐ சாதனை! ஒரே நாளில் ரூ. 70.7 கோடி பணப்பரிவர்த்தனைகள்!

ஆச்சர்யமூட்டும் தலைவன் தலைவி படத்தின் வசூல்!

பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து ஆக.8 முதல் ஒடிசாவில் காங்கிரஸ் போராட்டம்!

திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான்!

திருப்பூர் எஸ்எஸ்ஐ கொலை, கோவை காவல் நிலையத்தில் தற்கொலை! திமுக அரசுக்கு இபிஎஸ் கேள்வி

SCROLL FOR NEXT