வடித்த சாதம் வெண்மையாக இருக்க...
இட்லிக்கு உளுந்து அரைக்கும் போது ஃபிரிட்ஜ் வாட்டர் ஊத்தி அரைத்தால் மாவு நல்லா பொங்கி வரும்.
இட்லிக்கு உளுந்து அரைக்கும் போது ஃபிரிட்ஜ் வாட்டர் ஊத்தி அரைத்தால் மாவு நல்லா பொங்கி வரும்.
வெண்பொங்கல் செய்யும்போது, மிளகை லேசா வறுத்துபொடித்து சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும். உடலுக்கு ஆரோக்கியம்.
பிஸ்கட்டுகள் நமத்துப் போகாமல் இருக்க, மெல்லிய துணியில் சிறிது சர்க்கரையை மூட்டை போல் கட்டி, பிஸ்கட் டப்பாவில் போட்டு வைக்கலாம்.
வெயில் காலத்தில் பால் திரிந்து போகாமல் இருக்க, பாலுடன் நான்கைந்து நெல் விதைகளைப் போட்டு வைக்கலாம்.
வெங்காயம் நறுக்குவதற்கு முன் கத்தியை லேசாக சூடு செய்து விட்டால், கண் எரிச்சல் ஏற்படாது.
பூண்டை வெயிலில் வைத்து எடுத்தால், தோலை எளிதில் உரிக்கலாம்.
சாம்பார், வற்றல் குழம்பு ஆகியவற்றில் காரம் அதிகமாகிவிட்டால், நல்லெண்ணெய்யை ஊற்றி கொஞ்சம் கொதிக்க விடுங்கள். காரம் குறைந்து விடும், குழம்பின் வாசனையும் ருசியும் நன்றாக இருக்கும்.
குழம்பில் புளி அதிகமாகி விட்டால், சிறு உருண்டை வெல்லம் சேர்த்தால் புளிப்பு சுவை உடனே சரியாகி விடும்.
சாம்பாரில் சில சமயம் பருப்பு சேராமல் நீர்க்க இருக்கும். அப்போது துவரம்பருப்பு சிறிது எடுத்து மிக்சியில் அரைத்து சாம்பாரில் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். சாம்பார் கெட்டியாகிவிடும். அரிசி மாவு கரைத்து விடுவதை விட, இவ்வாறு செய்வது சாம்பாரின் ருசியை அதிகரிக்கும்.
சாதம் வேகாமல் நறுக்கரிசியாக இருந்தால், சாதத்தின் மேல் சிறிது தண்ணீரை தெளித்து குக்கரில் வைக்கவும். ஆவி வந்ததும், வெயிட் போட்டு உடன் அணைத்து விடவும். சத்தம் அடங்கியவுடன் குக்கரை திறந்தால் சாதம் பூவாக வெந்து இருக்கும்.
சில சமயங்களில் தண்ணீர் நன்றாக இல்லாவிட்டால், சாதம் நிறம் சற்று மங்கலாக இருக்கும். அப்போது அரிசி களைந்து குக்கரில் வைக்கும் போது சில சொட்டு எலுமிச்சை சாறு விட்டு வைத்தால், சாதம் பொல பொலவென்றும் வெண்மையாகவும் இருக்கும்.