இந்திய வீராங்கனைகள்...!
அலேக்சாண்டரை எதிர்த்துப் போரிட்டு வீர மரணம் அடைந்தவர் ராணிகிருபா தேவி.
போர்க்களத்தில் சாதித்த இந்திய வீராங்கனைகள் சிலர்:
அலேக்சாண்டரை எதிர்த்துப் போரிட்டு வீர மரணம் அடைந்தவர் ராணிகிருபா தேவி.
கோரி முகமதுவை எதிர்த்துப் போரிட்டு அவரை புறமுதுகிட்டு ஓடச் செய்தவர் நாயகி தேவி.
Advertisement
Advertisement
தைமூர் படைகளை எதிர்த்துப் போரிட்டு அவர்களை ஓடச் செய்தவர் ராம் பியாரி குர்ஜரி.
அக்பரின் படைகளை எதிர்த்துப் போரிட்டு விரட்டியவர் ராணி துர்காதேவி.
ஒளரங்கசீப்பை எதிர்த்துப் போரிட்டு மறைந்தவர் பீவி தலேர் கௌர்.
ஒளரங்கசீப் படைகளை வென்று 25 ஆண்டுகள் நல்லாட்சி செய்தவர் கர்நாடகத்தைச் சேர்ந்த மகாராணி சென்னம்மா.
ஆங்கிலேய ஆட்சியாளர்களை எதிர்த்துப் போர் புரிந்தவர் சிவகங்கை சமஸ்தான ராணி வேலு நாச்சியார். அவருடைய தற்கொலைப் படை தளபதி குயிலி.
ஆங்கிலேயப் படையை வீரத்துடன் எதிர்த்துப் போராடி வீர மரணம் அடைந்தவர் ராணி லட்சுமிபாய். அவருக்கு உதவி செய்து தன்னுடைய உயிரை தியாகம் செய்தவர் சாதாரண குடிமகள் ஜங்காரிபாய்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.