முகப்பு
மகளிர்மணி

திரிகடுகம் காபி

மிளகு, சுக்கு, திப்பிலி ஆகியவற்றை நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:36 AM
பகிர்:

தேவையான பொருள்கள்: 

மிளகு -30 கிராம்
சுக்கு- 50 கிராம்
திப்பிலி- 5 கிராம்
கருப்பட்டி- தேவையான அளவு
காபி தூள்- 2 தேக்கரண்டி

செய்முறை:

மிளகு, சுக்கு, திப்பிலி ஆகியவற்றை நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.  ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் கருப்பட்டியை போட்டு கரைத்தவுடன் காபி தூள், திரிகடுகம் பொடி சேர்த்து கலந்து 5 நிமிடங்கள் கொதித்தவுடன் இறக்கி மூடி வைக்கவும். தூள் தெளிந்தவுடன் வடிகட்டி சூடாகப் பருகவும். திரிகடுகம் காபி தயார். பால் சேர்க்காமல், காலை, மாலை இரு வேளைகள் அருந்தினால் உடலில் பித்தத்தைச் சமப்படுத்தும். நச்சுத்தன்மையை முறிக்கும். சளியை குணமாக்கும்.

முழு கட்டுரையைப் படிக்க →