பூசணி விதை மசால் கறி
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். அதில் 50 கிராம் பூசணிவிதைகளை சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வதக்கி எடுக்கவும்.
தேவையானவை
பூசணி விதைகள் 50 கிராம்
பெரிய வெங்காயம் 3
தக்காளி 2
சீரகம் ஒரு தேக்கரண்டி
சோம்பு ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
முந்திரி 10
பச்சை மிளகாய் 3
இஞ்சி பூண்டு ஐந்து பற்கள்
ஏலக்காய் 2
பட்டை 1
கிராம்பு 3
உப்பு தேவையான அளவு
வெண்ணெய் தேவையான அளவு
கரம் மசாலாத்தூள்அரை தேக்கரண்டி
நறுக்கிய மல்லி தழை சிறிதளவு
செய்முறை :
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். அதில் 50 கிராம் பூசணிவிதைகளை சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வதக்கி எடுக்கவும். பின்னர் வாணலியில் அதே போல பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து அதனுடன் சீரகம், சோம்பு போட்டு வதக்கவும். நன்றாக வறுத்த பிறகு துண்டாக்கிய இஞ்சி, நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். அதில் நறுக்கிய பச்சை மிளகாயையும் சேர்த்துவதங்கி வரும்பொழுது 10 முந்திரி பருப்புகளை சேர்த்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கவேண்டும்.
பிறகு அதில் வைத்துள்ள விழுதை சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விட்டு பூசணி விதைகளை சேர்த்து கலக்கவும். இப்போது , நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி அலங்கரித்து பரிமாறலாம்.