மகளிர்மணி

கற்றாழை பருப்புப் பாயாசம்

முதலில் கற்றாழையைத் தோல் சீவி நன்றாக அலசி, பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் பாதாம், முந்திரியை நெய்யில் வறுக்கவும். பின்னர், பாசிப்பருப்பை ஒரு வெறும் வாணலியில் போட்டு வறுத்து

ஏ.எஸ்.கோவிந்தராஜன்


தேவையான பொருள்கள் :

பாசிப்பருப்பு  1 கிண்ணம்
துருவிய வெல்லம்  2 கிண்ணம்
காய்ச்சிய பால்  2 கிண்ணம்
கற்றாழை  2 (தோல் சீவி நறுக்கியது)
முந்திரி  10
பாதாம்  10
ஏலக்காய்ப் பொடி  2 சிட்டிகை
நெய்  3 தேக்கரண்டி

செய்முறை : 

முதலில் கற்றாழையைத் தோல் சீவி நன்றாக அலசி, பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் பாதாம், முந்திரியை நெய்யில் வறுக்கவும். பின்னர்,  பாசிப்பருப்பை ஒரு வெறும் வாணலியில் போட்டு வறுத்து, பின் குக்கரில் குழைய வேகவைத்து மசித்துக்கொள்ளவும். அதனுடன் காய்ச்சிய பாலைச் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். பிறகு அதனுடன் துருவிய வெல்லத்தைச் சேர்த்து, வெல்லம் கரைந்ததும் கற்றாழையைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட வேண்டும்.  பின்னர்,  பாதாம், ஏலக்காய்ப் பொடி, முந்திரி சேர்த்து இறக்கினால், சுவையான கற்றாழை பருப்புப் பாயாசம் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவ தான் என்னவ... 🌹🌹😘 கௌரி கிஷன்

இந்தியா வருகிறார் தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர்!

கொஞ்சும் எழிலிசையே.. அனு!

பாஜகவின் தூண்டுதலில் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் - திருமா | Vck | TVK | Karur

திமுகவிற்கும் விஜய்க்கும் Underground dealing ஆ? - திருமா | TVK | VCK | Karur

SCROLL FOR NEXT