மகளிர்மணி

பனீர் பகோடா

கடலை மாவுடன் உப்பு, மிளகாய்த் தூள், ஓமம், தோசை சோடா, பால் சேர்த்து கெட்டி மாவாகப் பிசையவும்.

DIN

தேவையான பொருள்கள்:

பனீர்- 400 கிராம்

தோசை சோடா- 2 சிட்டிகை

உப்பு, மிளகாய்த் தூள்-

தலா 1 தேக்கரண்டி

பால்- 1 கிண்ணம்

கடலை மாவு- ஒன்றரை கிண்ணம்

ஓமம்- கால் தேக்கரண்டி

உள்ளே வைக்க:

உப்பு- ஒன்றே கால் தேக்கரண்டி

தனியா பௌடர், கரம் மசாலா-

தலா ஒன்றரை தேத்கரண்டி

எலுமிச்சைச் சாறு- 5 தேக்கரண்டி

செய்முறை:

கடலை மாவுடன் உப்பு, மிளகாய்த் தூள், ஓமம், தோசை சோடா, பால் சேர்த்து கெட்டி மாவாகப் பிசையவும். உள்ளே வைக்கக் கொடுத்துள்ள பொருள்களைக் கலந்து, எலுமிச்சைச் சாறு சேர்த்து பேஸ்ட் போல செய்யவும். பனீரை கால் அங்குல திக்காக ஸ்லைஸ் செய்யவும். பனீரை முழுவதும் வெட்டாமல் சிறிது கீறல் போல் செய்து பூரணம் நிரப்பவும். மீதி இருந்தால் பனீர் மேல் பரத்தி மாவில் தோய்த்து பொரித்தெடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

விஸ்வகா்மா ஜெயந்தி: பிரதமா் மோடி வாழ்த்து

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

யெஸ் வங்கியின் 13.1% பங்குகள்: எஸ்பிஐ விற்பனை

நடுவானில் இயந்திரக் கோளாறு: சென்னை-பெங்களூரு விமானம் அவசரமாக தரையிறக்கம்

SCROLL FOR NEXT