முகப்பு
தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

மலைப்புறங்களிலே மூங்கிலோடு மூங்கில்கள் உரசிக் கொண்டிருக்கின்ற மலைநாடனே!

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

சிறந்த நுகர்ந்தொழுகும் செல்வம் உடையார்
அறஞ்செய்து அருளுடையர் ஆதல் - பிறங்கல்
அமையோடு வேய்கலம் வெற்ப! அதுவே
சுமையோடு மேல்வைப்பா மாறு. (பாடல்-215)


மலைப்புறங்களிலே மூங்கிலோடு மூங்கில்கள் உரசிக் கொண்டிருக்கின்ற மலைநாடனே! சிறந்தவனாகிய இன்பங்களை அனுபவித்து வாழும் செல்வச் செழுமை உடையவர்கள், அறம் செய்து பிற உயிர்களிடத்து அருள் உடையவராகவும் ஆதல், பொற்சுமையோடு அதன்மேல் மணிகளையும் வைத்துக்கொண்டு செல்வது போன்றதாகும். செல்வர்கள் தாம் இன்புறுவதுடன், அறமும் அருளும் உடையவராகவும் விளங்குதல் சிறப்புடையதாகும். "சுமையோடு மேல்வைப்பா மாறு' என்பது பழமொழி.

முழு கட்டுரையைப் படிக்க →