சீனாவில் திறக்கப்பட உள்ள உலகின் மிக உயரமான பாலம்!
தெற்கு சீனாவின் குய்ஸோ மாகாணத்தில் உலகின் மிக உயரமான பாலம் இந்த ஆண்டு இறுதியில் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெற்கு சீனாவின் குய்ஸோ மாகாணத்தில் உலகின் மிக உயரமான பாலம் இந்த ஆண்டு இறுதியில் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலைப்பகுதிகள் நிரம்பிய சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது குய்ஸோ மாகாணம். இங்கே இரு மலைப்பகுதிகளில் நடுவே, ஆற்றுக்கு மேலாக கட்டப்பட்டுள்ளது பேய்ப்பன்ஜிங் பாலம். தரை மட்டத்தில் இருந்து 1854 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பாலம் 1341 மீட்டர் நீளம் கொண்டது. இந்த பாலம்தான் தற்பொழுது உலகின் மிக உயரமான பாலமென்று கருதப்படுகிறது.
இந்த பாலத்தின் இரு முனைகளும் சனிக்கிழமையன்று இணைக்கப்பட்டன. இந்த வருட இறுதியில் போக்குவரத்திற்கு இந்தப் பாலம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லியூபாண்சுயி மற்றும் ஸுஅன்வெய் பகுதிகளுக்கு இடையயேயான போக்குவரத்து நேரம் பாதியாக குறையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் உலகின் மிக உயரமான பாலங்களில் பெரும்பாலானவை சீனாவில்தான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.