உலகம்

ரயில் முன் பாய்ந்த பெண்ணை துணிச்சலுடன் காப்பாற்றிய சீன ரயில்வே அதிகாரி (விடியோ)

DIN

சீனாவில், புல்லட் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்ற பெண்ணை துணிச்சலுடன் காப்பாற்றிய ரயில்வே பாதுகாவலர் பலருக்கும் ஹீரோவாகியுள்ளார். அந்த விடியோ சமூக தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

சீனாவின் ரயில் நிலையம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான அந்த காட்சியில், ரயில் நிலையத்தில் காத்திருந்த கல்லூரி மாணவி என்று கருதப்படும் ஒரு பெண், புல்லட் ரயில், நடைமேடைக்கு வருவதற்கு முன்பாக வேகமாக ஓடுகிறாள்.

இதைப் பார்த்து சுதாரித்துக் கொண்ட ரயில்வே பாதுகாவலர், உடனடியாக அப்பெண்ணின் கையைப்பிடித்து இழுக்க, அப்பெண்ணோ, அவரையும் சேர்த்து இழுக்க, ரயில்வே அதிகாரி கீழே சறுக்கி விழுகிறார். இதில் அவரது தலை பலமாக தரையில் இடிக்கிறது. இருந்தும் சற்றும் மனம் தளராமல் அப்பெண்ணை முடிந்த அளவுக்கு சக்தி கொண்டு பின்னோக்கி இழுக்க, அவள் நடைமேடைக்குள் வர, சரியாக நடைமேடையை புல்லட் ரயில் கடந்து செல்கிறது.

இதற்குள் நடைமேடையில் நின்றிருந்த சிலர் ஓடி வந்து அவருக்கு உதவி செய்கிறார்கள். இந்த சம்பவத்தில், அப்பெண் சிறு காயம் இன்றி தப்பித்தார். ஆனால், காப்பாற்றியவருக்குத்தான் தலையில் பயங்கர வலி. அவர் தலையை தடவியபடி ரத்தம் வருகிறதா என்று பார்த்தபடியே இருக்கிறார்.
 

இந்த சம்பவம் மே 10ம் தேதி சீனாவின் ஃபுஜியன் மாகாணத்தில் உள்ள புடியன் ரயில்நிலையத்தில் நடந்ததாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT