உலகம்

தென்மேற்கு துருக்கியில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.1 புள்ளிகளாக பதிவு

DIN

அங்காரா: துருக்கி நாட்டின் தென்மேற்கு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை உள்ளூர் நேரப்படி 12:49 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 புள்ளிகளாக பதிவானது. 

முகலா மாகாணத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஏஜியன் கடலில் சுமார் 6.3 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கந்திலி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இரவு நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் ஒன்று திரண்டனர். அருகில் உள்ள நகரங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலநடுக்கத்தில் சோதங்கள் அல்லது உயிர்சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

கடந்த புதன்கிழமை முகலா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் ரிக்டரில் 5 புள்ளிகளாக பதிவாக நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2011-ஆம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: நிர்மலாதேவி குற்றவாளி

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT