உலகம்

சிரியாவில் அமெரிக்க விமானங்கள் வான்வழி தாக்குதல்: 50 பேர் பலி 

DIN

டமாஸ்கஸ்: சிரியாவின் டேய்ர் அல்-சோர் மாகாணத்தில் திங்களன்று அமெரிக்க விமானங்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் 50 பேர் பலியானார்கள்.  

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளை அரசுப்படைகள் தாக்குதல் நடத்தி கைப்பற்றினர். அவர்களை விரட்டியடித்தனர்.

நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள டேய்ர் அல்-சோர் மாகாணத்துக்கு உட்பட்ட பக்ஹவுஸ் நகரில் உள்ள குறிப்பிட்ட சில பண்ணை நிலங்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசம் இருந்தது.

அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற மார்ச் பத்தாம் தேதிவரை அரசு இறுதிக்கெடு விதித்திருந்தது. ஆனால், அவர்கள் சரணடைய முடியாது என்று மறுத்து விட்டனர்.

காலக்கெடு ஞாயிறுடன் முடிவடைந்த நிலையில் பக்ஹவுஸ் நகரின் மீது அமெரிக்காவை சேர்ந்த போர் விமானங்கள் திங்களன்று வான்வழி தாக்குதல் நடத்தின.

இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட சுமார் 50 பேர் உயிரிழந்ததாக சிரியா ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.           

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT