உலகம்

அரசுப் படைகளுடன் மோதல்: ஆப்கனில் 2 தளபதிகள் உட்பட 52 தலிபான்கள் பலி

DIN

காபுல்: அரசுப் படைகளுடன் நிகழ்ந்த மோதலில், ஆப்கனிஸ்தானில் இரண்டு தளபதிகள் உட்பட 52 தாலிபான்கள் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசு படையினருக்கும் இடையே நீண்டகாலமாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது.

அமைதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு பயங்கரவாத குழுக்களுக்கு அந்நாட்டின் அதிபர் விடுத்த அழைப்பும் தோல்வியில் முடிந்து விட்டது.

இந்நிலையில் அரசுப் படைகளுடன் நிகழ்ந்த மோதலில், ஆப்கனிஸ்தானில் இரண்டு தளபதிகள் உட்பட 52 தாலிபான்கள் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் கஸ்னி மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் பதுங்கியுள்ள தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து அந்நாட்டு ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் அபு காலித் மற்றும் சர்ஹாதி ஆகிய 2 தலிபான் தளபதிகள் உள்பட 52 பயங்கரவாதிகள் பலியாகியுள்ளனர்.

இந்த தகவலை அந்நாட்டு ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT