முகப்பு
உலகம்

சீனாவில் தொழில் நடத்துவதற்கான சூழலின் மேம்பாடு: ஊடகக் குழுமம் வெளியீடு

சீனாவில் தொழில் நடத்துவதற்கான சூழலின் மேம்பாடு என்னும் கட்டுரை ஒன்றை சீன ஊடகக் குழுமம் 24ஆம் நாள் வெளியிட்டது. 

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:31 AM
பகிர்:

சீனாவில் தொழில் நடத்துவதற்கான சூழலின் மேம்பாடு என்னும் கட்டுரை ஒன்றை சீன ஊடகக் குழுமம் 24-ஆம் நாள் வெளியிட்டது. 

தொழில் நடத்துதல் 2020 எனும் ஆண்டறிக்கையை உலக வங்கி 24-ஆம் நாள் வெளியிட்டது. சீனாவில் தொழில் நடத்துவதற்கான சூழல், உலக தரவரிசையில், 15 இடங்கள் முன்னேறி, 31-ஆவது இடத்தில் உள்ளது. இது சீனா சீர்திருத்தத்தை ஆழமாக்கி, வெளிநாட்டுத் திறப்புப் பணியை விரிவாக்குவதற்கான வாய்ப்பை மேலும் அதிகமாக்கும். 

பொருளாதாரத்தின் உயர் தர வளர்ச்சியை சீனா மேலும் முன்னேற்றி, தொழில் நடத்துவதற்கான சூழலை மேம்படுத்தி, உலக முதலீட்டாளர்களுக்கு மேலதிக வாய்ப்புகளை வழங்கும் என்று இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனாவில்  தொழில் நடத்துவதற்கான சூழல், சட்ட அமுலாக்கப் பாதையில் இருக்கின்றது. உலகளவில் தொழில் நடத்துவதற்கான விதியைப் பின்பற்றுகிறது. நேர்மையான போட்டியை விரைவுபடுத்துவதற்கு இது துணை புரியும். அதோடு, சீனாவில் அரசாங்க நிர்வாகச் சூழல் பயன்மிக்கதாகவும், வசதியானதாகவும் உள்ளது. 

சீனாவில் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் தொழில் நடத்துவதற்கும், முதலீடு செய்வதற்கும் பேரூக்கத்தை இது அளிக்கிறது. பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் தொழில் நடத்தி, முதலீடு செய்யும் முக்கிய இலக்கிடமாக சீனா இன்னும் திகழ்கின்றது என்று இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சீன ஊடகக் குழுமம்

முழு கட்டுரையைப் படிக்க →