உலகம்

இரட்டைக் கோபுர தாக்குதல் நினைவு தினம் இன்று: அறிய வேண்டிய முக்கியத் தகவல்கள் சில

DIN


அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையம் இயங்கி வந்த இரட்டைக் கோபுரங்கள் அல் குவைதா பயங்கரவாத அமைப்பினால் தகர்க்கப்பட்டதன் 18ம் ஆண்டு நினைவு தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

பயணிகள் விமானத்தைக் கடத்திய பயங்கரவாதிகள், இரட்டைக் கோபுரங்கள் மீது மோதியதில் கட்டடம் முழுமையாக இடிந்து தரைமட்டமானது. இதில்  ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.

உலகை உலுக்கிய சம்பவமாக அமைந்த இந்த நிகழ்வு, பயங்கரவாதத்தின் கோர முகத்தை உலகக்கு எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.

இந்த இரட்டைக் கோபுர தாக்குதல் நிகழ்வு தொடர்பான சில அறிய வேண்டிய செய்திகள் ஏராளமாக உள்ளன. அவற்றின் சிறிய தொகுப்பு இதோ..

இந்தத் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மாட்டிக்கொள்ளாத தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அவருடைய சகோதரர் ஜெர்மைன் ஜாக்சன் You Are Not Alone: Michael: Through a Brother's Eyes என்றொரு சுயசரிதை நூலில் இதுகுறித்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். 

அமெரிக்காவில் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நிகழ்த்திய இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பதிலடியாக தங்களுடைய இயக்கத் தலைவர் பின் லேடனை உயிருடனோ, பிணமாகவோ பிடிக்க முற்பட்டால் ஐரோப்பியக் கண்டம் முழுவதையும் அணுகுண்டு வெடித்து தகர்த்து விடுவோம் என்று அல் கய்தா பயங்கரவாதிகள் எச்சரித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT