சீன நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு கசிவு: 18 தொழிலாளர்கள் பலி
சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விஷவாயு கசிவின் காரணமாக 18 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.
சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விஷவாயு கசிவின் காரணமாக 18 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.
பெய்ஜிங்கிலிருந்து தென்மேற்கில் 1,800 கி.மீ தொலைவில் உள்ள சோங்கிங் நகரின் டயோஷுய்டோங் சுரங்கத்தில் வெள்ளிக்கிழமை கார்பன் மோனாக்சைடு விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதில் 18 சுரங்கத் தொழிலாளர்கள் பலியாகியுள்ளதாகவும் மேலும் 24 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
முன்னதாக இதே சுரங்கத்தில் 2013-இல் நடைபெற்ற விபத்தில் 3 தொழிலாளர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. சோங்கிங் நிலக்கரி சுரங்கத்தில் தொடர்ச்சியாக விபத்துகள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது.