முகப்பு
உலகம்

அமெரிக்க வணிகப் பிரதிநிதியாக ஆசிய-அமெரிக்கர் கேதரின் டாய்: பைடன் பரிந்துரைக்க வாய்ப்பு

அமெரிக்க வணிகப் பிரதிநிதியாக சீன - அமெரிக்கரான வணிகத் துறை வழக்குரைஞர் கேதரின் டாயை அமெரிக்க அதிபர் (தேர்வு) ஜோ பைடன் பரிந்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:05 PM
அமெரிக்க வணிகப் பிரதிநிதியாக ஆசிய-அமெரிக்கர் கேதரின் டாய்: பைடன் பரிந்துரைக்க வாய்ப்பு
பகிர்:


வாஷிங்டன்: அமெரிக்க வணிகப் பிரதிநிதியாக சீன - அமெரிக்கரான வணிகத் துறை வழக்குரைஞர் கேதரின் டாயை அமெரிக்க அதிபர் (தேர்வு) ஜோ பைடன் பரிந்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற நாடுகளுடன் மேற்கொள்ளும் புதிய ஒப்பந்தங்கள் மற்றும் வணிக விதிமுறைகளை உருவாக்கும் விவகாரங்களை அமெரிக்க வணிகப் பிரநிதிநிதியே நிர்வகிப்பார். இந்தப் பதவி, அமைச்சர் அந்தஸ்துக்கு இணையானது.

இவர் 2017-ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் வரித்துறை அமைப்பான ஹவுஸ் வேய்ஸ் மற்றும் மீன்ஸ் கழகத்தின்  தலைமை வணிக வழக்குரைஞரான இருந்து வருகிறார். மேலும், சர்வதேச வர்த்தக விவகாரங்களை கவனிக்கும் அமைப்பின் மூத்த ஆலோசகராகவும் உள்ளார்.

பைடன் அறிவித்துள்ள இந்தப் பதவியை வகிக்கப்போகும் முதல் சீன-அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவராக இவர் இருப்பார் என்பது குறிப்பிடத் தக்கது.

பைடனின் தலைமையில் அமையும் அமைச்சரவையில் இடம்பெறும் ஆசிய-அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது பெண்ணாகவும் டாய் இருக்கப் போகிறார்.

டிரம்ப் தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்ட அமெரிக்க - மெக்சிகோ - கனடா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின்போது, அமெரிக்க தலைமை வணிக ஆலோசனை அமைப்பு, தொழிலாளர்களின் நலன் தொடர்பான விவகாரங்களில் மிக முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

யேல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார் கேதரின் டாய். ஹார்வர்ட் சட்டப் பள்ளியில் சட்டம் பயின்றுள்ளார். ஷோங்ஷான் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் ஆங்கிலப் பேராசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →