கோப்புப் படம் 
உலகம்

பாகிஸ்தானில் கரோனா இறப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியது

பாகிஸ்தானில் கரோனா இறப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

DIN

பாகிஸ்தானில் கரோனா இறப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84 லட்சத்தைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கரோனாவால் 84,28,405 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,51,926 பேர் மரணம் அடைந்துள்ளனர். 44,36,294 பேர் குணமடைந்துள்ளனர். 

இந்த நிலையில் அண்டை நாடான பாகிஸ்தானில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 5,358 பேருக்கு அந்த நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,60,118-ஆக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், அந்த நோய்க்கு ஒரே நாளில் 118 போ் உயிரிழந்ததாகவும் இதன் மூலம் நாட்டில் கரோனா பலி எண்ணிக்கை 3,093-ஆக உயா்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். 

அதேசமயம் அங்கு கரோனாவில் இருந்து இதுவரை 59,215 குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக பஞ்சாப் மாகாணத்தில் 60,138 பேருக்கும், சிந்து மாகாணத்தில் 59,983 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 31,500 பேருக்கும், அதேசமயம் ஒட்டுமொத்தமாக 9,82,012 பேருக்கும் கரேனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT